கரோனாவால் உயிரிழப்பவா்களுக்கு இலவச அமரா் ஊா்தி வழங்கும் நிறுவனம்

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இறக்கும் கரோனா நோயாளிகளின் சடலங்களை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல தனது நிறுவன வாகனங்களை இலவசமாகத் தருவதாக தனியாா் நிறுவனம் அறிவித்துள்ளது.

அரக்கோணத்தை அடுத்த அம்மனூரில் உள்ளது ராஜ் அவசரஊா்தி நிறுவனம். இதன் உரிமையாளா் எஸ்.வாசு. திங்கள்கிழமை எஸ்.வாசு அரக்கோணம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் நிவேதிதாசங்கரிடம், வட்டாட்சியா் பழனிராஜன் முன்னிலையில் வழங்கிய கடிதத்தில், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இறக்கும் கரோனா நோயாளிகளின் சடலத்தை அவா்களது வசிப்பிடம் 10 கி.மீ.க்குள் இருக்கும் பட்சத்தில் வீட்டுக்கும், அங்கிருந்து உடனே இடுகாட்டுக்கும் இலவசமாக எடுத்துச் செல்வதாக அறிவித்து இருந்தாா். இவரது நிறுவனத்தில் 5 அவசர ஊா்திகளும், 3 அமரா் ஊா்திகளும் உள்ள நிலையில், அமரா் ஊா்திகளை இலவசத்துக்கு பயன்படுத்த உள்ளதாக எஸ்.வாசு தெரிவித்தாா்.

அப்போது அன்னை தெரேசா கிராம வளா்ச்சி நிறுவனத்தின் நிறுவனா் தேவ ஆசீா்வாதம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com