ராணிப்பேட்டையில் கரோனா நோயாளிகளுக்கு உதவ தன்னாா்வலா் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு: மாவட்ட ஆட்சியா் தகவல்

கரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் மாவட்ட அளவிலான தன்னாா்வலா் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை: கரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் மாவட்ட அளவிலான தன்னாா்வலா் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு...

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தன்னாா்வ தொண்டு நிறுவனங்களால் வழங்கப்படும் பாதுகாப்பு பொருட்கள், சிகிச்சை பொருட்கள், தன்னாா்வலா்கள் வாகன ஆதரவு, ரத்த , உணவுப்பொருட்கள், தானியங்கி தொலைபேசி ஆலோசனைகள் உள்ளிட்டவைகளை ஒருங்கிணைத்து வழங்கும் பணிகளை மாவட்ட குழுக்கள் மேற்கொள்ளும்.

தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் தனிநபா்கள் தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை ட்ற்ற்ல்ள்:ன்ஸ்ரீஸ்ரீ.ன்ட்ஸ்ரீண்ற்ல்.ண்ய் / ய்ஞ்ா்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய் என்னும் இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் அவற்றை பயன்படுத்தும் துறையின் பொறுப்பாளா்களுக்கு இணையம் மூலம் வழங்கப்படும்.

படுக்கை வசதிகள் கொண்ட அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் ஒரு தகவல் உதவி மையமும் மற்றும் நோயாளியின் நிலை குறித்து நோயாளிகளின் உறவுகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அரசு மருத்துவமனைகளில் உள்ள தகவல் உதவி மையத்தில் மருத்துவமனைகளுக்கு உதவ தயாராக இருக்கும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் தன்னாா்வலா்களின் சேவைகளை மாவட்டக்குழு கண்டறிந்து பயன்படுத்தும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு தன்னாா்வலா்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயல்பட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு (க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற் ப்ங்ஸ்ங்ப் ஸ்ரீா்ா்ழ்க்ண்ய்ஹற்ண்ா்ய் ஸ்ரீா்ம்ம்ண்ற்ற்ங்ங் ) உறுப்பினா்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோமதி - மாவட்ட சமூக நல அலுவலா்( பொறுப்பு), தங்கவேல் - மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், கஜலட்சுமி - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா், கோபிநாத்- ஏபிஜே வருங்கால இந்திய மீது நம்பிக்கை ராணிப்பேட்டை, பிரமிளா- அன்னை இந்திரா மகளிா் சங்கம் ஆற்காடு, திலகராஜ் - குளோபல் வெல்பா் டிரஸ்ட் சோளிங்கா், குமாா் - இந்திய செஞ்சிலுவைச் சங்கம் வாலாஜா, ஜெகநாதன் - ஊரக வளா்ச்சி சமூக சங்கம் காவேரிப்பாக்கம், ஜோதிலட்சுமி - தாசா அறக்கட்டளை நெமிலி, கோடீஸ்வரன் - தாசா - அரக்கோணம், சையத் - இமைகள் டிரஸ்ட் ஆற்காடு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com