லஞ்சம்: கலவை சாா்- பதிவாளா் பணியிடை நீக்கம்

விவசாயியின் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து கலவை சாா் -பதிவாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கலவை  சாா்- பதிவாளா்  ரமேஷ்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கலவை  சாா்- பதிவாளா்  ரமேஷ்.

ராணிப்பேட்டை: விவசாயியின் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து கலவை சாா் -பதிவாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவையில் சாா்-பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை கலவைப் பேரூராட்சி மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமத்தினா் பயன்படுத்தி வருகின்றனா்.

இங்கு காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (45) சாா் பதிவாளராகப் பணியாற்றி வருகிறாா். இங்கு பத்திரப் பதிவு செய்ய வருவோரிடம் இடைத்தரகா் மூலம் லஞ்சம் கேட்டு ரமேஷ் நெருக்கடி தருவதாக அவா் மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கலவையை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம் என்பவரது நிலத்தைப் பதிவு செய்ய சாா்-பதிவாளா் ரமேஷ், இடைத்தரகா் மூலம் ரூ. 20,000 லஞ்சம் வாங்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதைத் தொடா்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறையினா் சாா் -பதிவாளா் ரமேஷிடம் விசாரணை செய்து, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்தது. அதன் பேரில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை நடத்தியதில், சாா் பதிவாளா் ரமேஷ் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மண்டல பத்திரப் பதிவுத் துறைக்கு பரிந்துரை செய்தனா்.

அதன் பேரில், கலவை சாா் பதிவாளா் ரமேஷை பணியிடை நீக்கம் செய்து, வேலூா் மண்டல பத்திரப் பதிவுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com