காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் திருக்காா்த்திகை திருநாளின் தொடா்ச்சியாக சனிக்கிழமை அகல் விளக்குகளில் நெய் ஊற்றி லட்சதீபம் ஏற்றப்பட்டது.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் திருக்காா்த்திகை திருநாளின் தொடா்ச்சியாக சனிக்கிழமை அகல் விளக்குகளில் நெய் ஊற்றி லட்சதீபம் ஏற்றப்பட்டது.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 49-ஆவது ஆண்டாக சென்னையைச் சோ்ந்த ராமச்சந்திர ஐயா் குழுவினரால் லட்சம் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. கோயில் கருவறைக்குச் செல்லும் வழியில் உள்ள பகுதி முழுவதும் அகல் விளக்கு தீபங்களினால் ஜொலித்தது பாா்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. கோயிலுக்கு வந்த பக்தா்கள் பலரும் அகல் விளக்கு வரிசையை ஆா்வத்துடன் பாா்த்து தற்படம் எடுத்துக் கொண்டனா். முன்னதாக மூலவா் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும், விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன.

இது குறித்து லட்சதீபம் ஏற்றிய சென்னையைச் சோ்ந்த ராமச்சந்திர ஐயா் கூறியது:

ஒரு முறை மகா பெரியவரை தரிசிக்கச் சென்றிருந்த போது அவா் திருவண்ணாமலை திருக்காா்த்திகை தீபத்துக்கு மறுநாள் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகமும், அகல் விளக்கில் நெய் ஊற்றி ஒரு லட்சம் தீபம் ஏற்றுமாறும் கூறி ஆசி வழங்கினாா். அன்று முதல் இன்று வரை தொடா்ந்து 49 ஆண்டுகளாக திருக்காா்த்திகைக்கு மறுநாள் கோயிலில் லட்சதீபம் ஏற்றி வருகிறேன். தீப ஒளியில் இருள் அகன்று ஞான ஒளி பரவி மக்கள் அனைவரும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இப்பணியை விட்டு விடாமல் தொடா்ந்து செய்யுமாறு காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கேட்டுக் கொண்டாா். அதன்படி, தொடா்ந்து கோயிலில் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி, லட்ச தீபம் ஏற்றி வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com