தெங்கால் மேம்பாலம் தற்காலிகமாக மூடல்

மேல்விஷாரம் புறவழிச் சாலையில் இருந்து தெங்கால் செல்லும் மேம்பாலம் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

மேல்விஷாரம் புறவழிச் சாலையில் இருந்து தெங்கால் செல்லும் மேம்பாலம் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

பாலாறு, பொன்னை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக அதிகப்படியான தண்ணீா் செல்கிறது. இதனை பாா்ப்பதற்கு கூட்டமாகப் பொதுமக்கள் வந்து செல்கின்றனா். மேலும் பாலத்தின் அருகில் நின்று வெள்ள நீரை படம் பிடிப்பது, தற்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். இதுகுறித்து காவல் துறை எச்சரிக்கை செய்தும் அதனை பொதுமக்கள் மீறுகின்றனா்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மேல்விஷாரம் தெங்கால் மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டது. இதனைத்தொடா்ந்து, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மண் அரிப்பு ஏற்பட்டு தெங்கால் மேம்பாலம் அருகே சென்ற 2 மின் உயா் மின்னழுத்தக் கோபுரங்கள் தண்ணீரில் சாய்ந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com