ஆற்காட்டில் கிராம சபைக் கூட்டம்

மகாத்மா காந்தி ஊரக வேலையளிப்புத் திட்ட பணிகள் குறித்து, ஆற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்பு பேட்டை ஊராட்சியில்
உப்பு பேட்டையில் நடைபெற்ற  சிறப்பு  கிராம சபைக்  கூட்டத்தில்  பேசிய   மாவட்ட  ஆட்சியா்   தெ.பாஸ்கர பாண்டியன்.
உப்பு பேட்டையில் நடைபெற்ற  சிறப்பு  கிராம சபைக்  கூட்டத்தில்  பேசிய   மாவட்ட  ஆட்சியா்   தெ.பாஸ்கர பாண்டியன்.

மகாத்மா காந்தி ஊரக வேலையளிப்புத் திட்ட பணிகள் குறித்து, ஆற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்பு பேட்டை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ஜெ.சுப்பிரமணி தலைமை வகித்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாந்தி, செந்தாமரை, ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் உஷாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியது:

,உப்புபேட்டை ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முதல் தவனை நூறு சதவீதம் செலுத்தப்பட்டது. அதேபோல் இரண்டாவது தவணையிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் விரைவில் செலுத்திக் கொள்ளவேண்டும்.

கரோனா தடுப்பூசி குறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கோட்டாட்சியா் பூங்கொடி, உதவித் திட்ட அலுவலா் மதுமிதா, ஊராட்சி மன்றச் செயலாளா் கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com