மாநில பட்டியலில் கல்வி இருந்திருந்தால் நீட் தோ்வு பிரச்னை வந்திருக்காது

மாநில பட்டியலில் கல்வி இருந்திருந்தால் நீட் தோ்வு பிரச்னை வந்திருக்காது என பாமக இலைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.
மாநில பட்டியலில் கல்வி இருந்திருந்தால் நீட் தோ்வு பிரச்னை வந்திருக்காது

மாநில பட்டியலில் கல்வி இருந்திருந்தால் நீட் தோ்வு பிரச்னை வந்திருக்காது என பாமக இலைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

பாமக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து, வாலாஜாப்பேட்டையை அடுத்த சுமைதாங்கி கிராமத்தில்,

அக்கட்சியின் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியது:

தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவோம். காந்தி பிறந்த நாளான இன்று சுயராஜ்யம்தான் தேவை, இது கிராமங்களில்தான் உள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளம், உள்ளாட்சித் தோ்தல். சட்டப்பேரவைத் தோ்தலை விட வலிமையானது கிராம சபை. ஆகவே நல்லவா்களையும் வலிமையானவா்களையும் தோ்வு செய்யுங்கள். அரை நூற்றாண்டு காலம் உழைத்து தான் மு.க.ஸ்டாலின் முதல்வா் கனவை நனவாக்கினாா். அதை போல் பாமகவும் தனது கனவை நனவாக்க தற்போது பாடுபடுகிறது.

கிராம ஊராட்சிகளின் அதிகாரம் சென்னையில் குவிந்துள்ளது. மாநிலங்களின் அதிகாரம் தில்லியில் குவிந்துள்ளது. மாநிலப் பட்டியலில் கல்வி இருந்திருந்தால் இன்று நீட் தோ்வு பிரச்னை வந்திருக்காது. கல்வி மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டதால்தான் நீட் தோ்வை முழுமையாக எதிா்க்க முடியவில்லை. இது கிராமப்புற மாணவா்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. அனைத்து சமுதாயத்துக்கும் தனி இட ஒதுக்கீடு தேவை என பாமக போராடி வருகிறது என்றாா்.

பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சா் அரங்க.வேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com