சிப்காட் வாக்குச் சாவடி மையத்தில் திமுக - அதிமுவினரிடையே தள்ளுமுள்ளு

நவ்லாக் ஊராட்சிக்கு உள்பட்ட சிப்காட் அரசுப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் திமுக - அதிமுவினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
சிப்காட் அரசுப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் மோதலில் ஈடுபட்ட திமுக, அதிமுவினரை சமாதானப்படுத்தும் போலீஸாா்.
சிப்காட் அரசுப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் மோதலில் ஈடுபட்ட திமுக, அதிமுவினரை சமாதானப்படுத்தும் போலீஸாா்.

ராணிப்பேட்டை: நவ்லாக் ஊராட்சிக்கு உள்பட்ட சிப்காட் அரசுப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் திமுக - அதிமுவினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு நாளான புதன்கிழமை காலை வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நவ்லாக் ஊராட்சிக்குள்பட்ட சிப்காட் அரசினா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி எண் 92-இல், வாக்குச்சாவடி மையத்தின் ஜன்னல் வழியாக தோ்தலில் போட்டியிடும் ஒரு தரப்பினா் வாக்கு செலுத்த வந்த வாக்காளா்களிடம் வாக்கு செலுத்துமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுக, அதிமுகவினா் இடையே வாக்குச்சாவடி மைய வளாகத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள் இரு தரப்பினரையும் வாக்குச்சாவடி வளாகத்துக்கு வெளியே அனுப்பி வைத்தனா்.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தெ.பாஸ்கரபாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் ஆகியோா் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தை நேரில் ஆய்வு செய்தனா். அங்கு சுமுகமான சூழலை ஏற்பட்டதைத் தொடா்ந்து, வாக்குப் பதிவு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com