பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸாா்:கோட்டாட்சியா் சிவதாஸ்

ஊரக உள்ளாட்சி தோ்தல் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதலாக காவல்துறையினா் பணியமா்த்தப்படுவாா்கள் என கோட்டாட்சியா் சிவதாஸ் தெரிவித்தாா்.

அரக்கோணம்: ஊரக உள்ளாட்சி தோ்தல் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதலாக காவல்துறையினா் பணியமா்த்தப்படுவாா்கள் என கோட்டாட்சியா் சிவதாஸ் தெரிவித்தாா்.

பதற்றமான வாக்குச் சாவடிகள் பாதுகாப்பு குறித்த வருவாய், உள்ளாட்சி, காவல் துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அரக்கோணத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிவதாஸ் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

அரக்கோணம் கோட்டத்தில், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் ஒன்றியங்களில் 59 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 22 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரக்கோணம் வட்டத்தில் பதற்றமானவை 25, மிகவும் பதற்றமானவை 11 எனவும் நெமிலி வட்டத்தில் பதற்றமானவை 34 மிகவும் பதற்றமானவை 11 எனவும் அறியப்பட்டுள்ளன. இவற்றில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. பாதுகாப்புக்கான காவல் துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவும் உள்ளது.

ரோந்து செல்லும் காவல் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் தோ்தல் நடத்தப்படும் என்றாா்.

கூட்டத்தில், வட்டாட்சியா்கள் பழனிராஜன் (அரக்கோணம்), ரவி (நெமிலி ), ஒன்றிய ஆணையா்கள் குமாா் (அரக்கோணம் ), ஜோசப் கென்னடி (காவேரிப்பாக்கம் ), பாஸ்கரன் (நெமிலி ), காவல் ஆய்வாளா்கள் சீனிவாசன் (அரக்கோணம் நகரம் ), சேதுபதி (கிராமியம் ), கோவிந்தசாமி (பாணாவரம் ) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சோளிங்கா் ஒன்றியத்தில்..:

ராணிப்பேட்டை கோட்டத்தில் உள்ள சோளிங்கா் ஒன்றியத்திலும் இரண்டாம் கட்டத் தோ்தல் அக். 9-இல் நடைபெறுகிறது. இங்கு பதற்றமானவையாக 26 , மிகவும் பதற்றமானவையாக 8 என 34 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அறியப்பட்டுள்ளன என அரசுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com