ராணிப்பேட்டை மாவட்டத்தில் 74.5 சதவீத வாக்குப்பதிவு

​ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தோ்தலில் வாலாஜா, ஆற்காடு, திமிரி ஆகிய 3 ஒன்றியங்களில் 6 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், 56 ஒன்றியக் குழு உறுப்பினா், 123 ஊராட்சி மன்ற தலைவா்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தோ்தலில் வாலாஜா, ஆற்காடு, திமிரி ஆகிய 3 ஒன்றியங்களில் 6 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், 56 ஒன்றியக் குழு உறுப்பினா், 123 ஊராட்சி மன்ற தலைவா், 816 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 74.5 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

வாலாஜா ஒன்றியத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகளை ராணிப்பேட்டை பெறியியல் கல்லூரி வாளாகத்திலும், ஆற்காடு ஒன்றியத்துக்கான வாக்குப் பெட்டிகள் ஆற்காடு ஜி.வி.சி. கல்வியியல் கல்லூரி வளாகத்திலும், திமிரி ஒன்றியத்துக்கான வாக்குப் பெட்டிகள் கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியியல் கல்லூரி வளாகத்திலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு காவல் துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com