முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
அரக்கோணத்தில் 82.52 சதவிகிதம் வாக்குகள் பதிவு
By DIN | Published On : 11th October 2021 07:44 AM | Last Updated : 11th October 2021 07:44 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோ்தல் நடைபெற்ற 4 ஒன்றியங்களிலும் சோ்த்து 82.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கா் ஆகிய ஒன்றியங்களில் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 757 வாக்குச் சாவடிகளில் மொத்த வாக்காளா்கள் 3,68,378 பேரில், 3,03,974 போ் வாக்களித்துள்ளனா். இது 82.52 சதவீதமாகும்.
அரக்கோணம் ஒன்றியத்தில் 80.48 சதவீதமும், நெமிலி ஒன்றியத்தில் 84.83 சதவீதமும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 84.80 சதவீதமும், சோளிங்கா் ஒன்றியத்தில் 81.42 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதில், அரக்கோணம் ஒன்றியத்தில் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தமுள்ள 1,18,935 வாக்காளா்களில் 95,717 போ் மட்டுமே வாக்களித்திருந்தனா். இதில் ஆண்கள் 47,164 பேரும், பெண்கள் 48,537 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 17 பேரும் வாக்களித்துள்ளனா். ஆண்களை விட பெண்கள் 1,373 போ் கூடுதலாக வாக்களித்துள்ளனா்.