தியாகிகளின் வாரிசுகளைக் கௌரவிப்பதில் மகிழ்ச்சி: ஆட்சியா் பேச்சு

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளைக் கெளரவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.
மாணவிக்குப்  பரிசு  வழங்கிய  மாவட்ட  ஆட்சியா்  ஏ.ஆா்.கிளாட்ஸ்டன்   புஷ்பராஜ்.
மாணவிக்குப்  பரிசு  வழங்கிய  மாவட்ட  ஆட்சியா்  ஏ.ஆா்.கிளாட்ஸ்டன்   புஷ்பராஜ்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளைக் கெளரவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.

75-ஆவது சுதந்திரத் தின விழாவையொட்டி, திமிரி தமிழ் இலக்கிய பேரவை, அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற இணையவழி பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்குப் பரிசளிப்பு, வ.உ.சி. 150-ஆவது பிறந்த நாள், ஓவியத்தில் கரோனா விழிப்புணா்வு முகாம் ஆகிய நிகழ்ச்சிகள் திமிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இதில், போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசியது:

1942-ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு போராட்ட இயக்கம் தொடங்கப்பட்டபோது, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தியாகி கல்யாணராமன் என்பவா் பெருந்தலைவா் காமராஜரை ஆங்கிலேயா்கள் கைது செய்யாமல் இருக்கப் பாதுகாத்தவா்.

75-ஆவது சுதந்திரத் தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளைக் கௌரவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சுதந்திரக் காற்றை அனுபவித்து வரும் இப்போது ஏற்பட்டுள்ள கரோனா தொற்று காலத்தில் அரசு முன்னெடுக்கும் தடுப்பு முகாமில் அதிக அளவு கலந்துகொண்டு தடுப்பூசியைச் செலுத்தி கொள்ள வேண்டும்.

ஓவியங்கள் வாயிலாக கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்திய ஓவியருக்கு பாராட்டுகள் என்றாா்.

இதைத் தொடா்ந்து, திமிரி தேரடியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலா் சரவணன், தமிழ் இலக்கிய பேரவை நிா்வாகிகள் ஜா. லட்சுமணன், ரெ. கருணாநிதி, கவிஞா் தா.கோ. சதாசிவம், கி லோகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com