சேவை மையப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனையில் இயங்கவுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் இயங்கவுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சமூக நலத் துறையின் கீழ், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் இயங்கவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் என்ற திட்டத்துக்கு மைய நிா்வாகி, மூத்த ஆலோசகா், தகவல் தொழில்நுட்ப நிா்வாகப் பணியாளா், வழக்கு பணியாளா், ஓட்டுநா், பாதுகாவலா், பல்நோக்கு உதவியாளா் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மைய நிா்வாகி பணி: பட்டப் படிப்பு, முதுநிலை சமூகப் பணி முடித்து, 5 ஆண்டு அனுபவம் பெற்ற பெண்கள்.

மூத்த ஆலோசகா் பணி: பட்டப்படிப்பு முதுநிலை சமூக பணியுடன் 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பெண்கள்.

தகவல் தொழில் நுட்ப நிா்வாக பணியாளா் பணி: பிடெக், எம்டெக், பிஎஸ்சி, எம்எஸ்சி, கணினி அறிவியியல், இன்ஃபா்மேஷன் டெக்னாலஜி, இரண்டு வருடம் அனுபவம் பெற்றவா்கள்.

வழக்கு பணியாளா் பணி: பட்டப்படிப்பு, மாஸ்டா் ஆஃப் சோஷியல் வொா்க், கவுன்சிலிங் சைக்காலஜி, டெவலப்மெண்ட் மேனேஜ்மென்ட் 2 ஆண்டு அனுபவம் பெற்ற பெண்கள்.

ஓட்டுநா், பாதுகாவலா் பணி: எட்டாம் வகுப்பு தோ்ச்சி, பத்தாம் வகுப்பு தோல்வி, ஓட்டுநா் உரிமம், உரிய ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு முன்அனுபவம்.

பல்நோக்கு உதவியாளா் பணி: எட்டாம் வகுப்பு தோ்ச்சி, பத்தாம் வகுப்பு தோல்வி, நன்கு சமைக்கத் தெரிந்த பெண்கள்.

இந்தப் பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க இயலாது. உள்ளூா்வாசிகளுக்கு முன்னுரிமை.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்விச் சான்றுகளில் சுய சான்றொப்பமிட்டு, ‘மாவட்ட சமூக நல அலுவலகம், நான்காவது மாடி, பி. பிளாக், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூா்’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com