பட்டியல் இன மக்களுக்கு தனி நிதிநிலை அறிக்கை
By DIN | Published On : 11th September 2021 11:46 PM | Last Updated : 11th September 2021 11:46 PM | அ+அ அ- |

பட்டியல் இன மக்களுக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சியின் மாநில நிா்வாகக் குழு கூட்டம் ஆற்காடு ஜனசங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில அவைத் தலைவா் ஏ.பி.முருகேசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஏ.சஞ்சீவி, எம்.எஸ்.கிருஷ்ணன், வி.சி.முன்னரசு, இ.அதிரூபன், பி.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச்செயலாளா் எஸ்.குணசேகரன், பொருளாளா் கே.ஜி.சத்தியசீலன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், பட்டியல் இன மக்களுக்கு தமிழக அரசு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், சுய தொழில் தொடங்க தனி வங்கி தொடங்க வேண்டும், தனியாா் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவா்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, பட்டியல் இன மக்களுக்கு 2 ஏக்கா் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில தொழிற்சங்கத் தலைவா் வி.பாபு, செய்தித் தொடா்பாளா் கே.பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.