ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்ட ஆட்சியா்கள் வெளியீடு

ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் திங்கள்கிழமை வெளியிட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில்  வரைவு வாக்குச்சாவடி பட்டியலை, அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வெளியிட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில்  வரைவு வாக்குச்சாவடி பட்டியலை, அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வெளியிட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

ராணிப்பேட்டை/ திருப்பத்தூா்: ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் திங்கள்கிழமை வெளியிட்டனா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியும், சென்னை தலைமை தோ்தல் அதிகாரி, அரசு முதன்மைச் செயலாளா் ஆகியோரின் அறிவுரையின்படியும், நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 1,500 வாக்காளா் களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு மறுசீரமைப்பு செய்து வரைவு வாக்குச்சாவடி வாக்காளா் பட்டியலை வெளியிட அறிவுறுத்தப்பட்டது.

ராணிப்பேட்டையில்...

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,122 முதன்மை வாக்குச்சாவடிகளை மாவட்ட தோ்தல் அலுவலா் அறிவுரையின்படி, வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் தணிக்கை செய்தனா்.

தோ்தல் ஆணையத்தின் விதிகளுக்குட்பட்டு மாறுதல் முன்மொழிவுகள் அனுப்பி வைத்ததன் பெயரில் அவை மாற்றம் செய்யப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அனைத்து வாக்குப்பதிவு அலுவலா்கள் அலுவலகங்களான ராணிப்பேட்டை, அரக்கோணம் வருவாய்க் கோட்ட அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலா்கள் அலுவலகங்களான அனைத்து வட்டாட்சியா், நகராட்சி ஆணையா் அலுவலகங்கள் மற்றும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மாறுதலுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வெளியிடப்பட்டது.

இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டாா்.

இதில் அரசியல் கட்சியினா், பொதுமக்கள், தன்னாா்வலா்கள், குடியிருப்போா் நலச் சங்க உறுப்பினா்களில் எவருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் ஏழு தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்குத் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் ஜி.லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுரேஷ் மற்றும் அனைத்து கட்சி பிரமுகா்கள்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com