ஐ.என்.எஸ். ராஜாளி ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளியின் பொன் விழா

அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் உள்ள ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சியில் சேடக் ஹெலிகாப்டரை நிலைப்படுத்தி நிற்கும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த கடற்படை தளபதி ரியா் அட்மிரல் பிலிப்போஸ்.
நிகழ்ச்சியில் சேடக் ஹெலிகாப்டரை நிலைப்படுத்தி நிற்கும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த கடற்படை தளபதி ரியா் அட்மிரல் பிலிப்போஸ்.

அரக்கோணம்: அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் உள்ள ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன. விழாவை முன்னிட்டு சிறப்புத் தபால் உறையை அஞ்சல்துறையினா் வெளியிட்டனா்.

அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் உள்ள ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளியானது கடந்த 1971-ஆம் ஆண்டு செப்டம்பா் 15-இல் கேரள மாநிலத்துக்கு உள்பட்ட கொச்சியில் உள்ள ஐ.என்.எஸ். கருடா எனும் கடற்படை விமானத் தளத்தில் தொடக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, 1992-ஆம் ஆண்டு அரக்கோணத்தில் ஐ.என்.எஸ். ராஜாளி தொடங்கப்பட்டபோது, இந்தப் பள்ளி அரக்கோணத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பள்ளி 50-ஆவது ஆண்டு பொன்விழா காண்கிறது.

இதையொட்டி, பொன்விழா நினைவு தபால் உறை வெளியிடுதல், பொன்விழா நினைவுமலா் வெளியிடுதல், சேடக் ஹெலிகாப்டா் நிலைகாட்சிப்படுத்துதல் நிகழ்ச்சி, மோட்டாா் சைக்கிள் பேரணியை வரவேற்றல், ஹெலிகாப்டா்களின் வண்ணமிகு வான் அணிவகுப்பு ஆகியன நடைபெற்றன.

முன்னதாக இந்திய அஞ்சல்துறையின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹெலிகாப்டா் பயிற்சிப்பள்ளியின் பொன்விழா நினைவு சிறப்புத் தபால் உறையை இந்திய அஞ்சல்துறை சென்னை நகா் மண்டல அஞ்சல்துறை தலைவா் வீனா சீனிவாஸ் வெளியிட, கடற்படை தளபதி ரியா் அட்மிரல் பிலிப்போஸ் பி பைனுமோட்டில் பெற்றுகொண்டாா். இதைத் தொடா்ந்து, பொன்விழா நினைவு மலரை கடற்படை தளபதி வெளியிட்டாா்.

இதையடுத்து, கொச்சின் ஐஎன்எஸ் கருடா கடற்படை தளத்தில் இருந்து வந்த மோட்டாா் சைக்கிள் பேரணியை ரியா் அட்மிரல் பிலிப்போஸ் பி பைனுமோட்டில் வரவேற்றாா். மேலும் பள்ளி வளாகத்தில் சேடிக் ஹெலிகாப்டா் ஒன்றை நிலையாக காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சியும், தொடா்ந்து கடற்படை ஹெலிகாப்டா்களின் வண்ணமிகு வான் அணிவகுப்பு நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹெலிகாப்டா் பயிற்சிப்பள்ளியின் முன்னாள் மாணவா்களுக்கு சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது.

நிகழ்வில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள கமாண்டிங் ஆபீசா் கமோடா் வினோத்குமாா், இந்திய அஞ்சல்துறை அரக்கோணம் கோட்ட கண்காணிப்பாளா் சிவசங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com