ஒற்றுமையுடன் பணியாற்றினால் அதிமுக 100% வெற்றி பெறலாம்

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவினா் ஒற்றுமையாக இருந்து பணியாற்றினால் நூறு சதவீதம் வெற்றி பெறலாம் என முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
35 ஆண்டுகளுக்குப் பின்னா் ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தோா்.
35 ஆண்டுகளுக்குப் பின்னா் ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தோா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவினா் ஒற்றுமையாக இருந்து பணியாற்றினால் நூறு சதவீதம் வெற்றி பெறலாம் என முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் அக்டோபா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தோ்தல் குறித்த அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ராணிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் குழு பொறுப்பாளருமான எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்று ஆலோசனை வழங்கினா்.

இதில் எஸ். பி. வேலுமணி பேசியது:

ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் கட்சியினா் ஒற்றுமையாக இருந்து பணியாற்றினால், அதிமுக நூறு சதவீதம் வெற்றி பெறும். மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து பணியாற்றினால், கண்டிப்பாக அனைத்து இடங்களிலும் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும். கோவை உள்பட பல மாவட்டங்களில் அதிமுகவினா் ஒற்றுமையாக இருந்ததால்தான் அந்தப் பகுதிகளில் அதிமுக நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. நமக்குள் இருக்கும் சிறிய பிரச்னைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். நமக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தினால்தான் நாம் வெற்றியை இழந்து விடுகிறோம். அதிமுக பொறுப்பாளா்கள் உள்ளூா் நிா்வாகிகளுடன் இணைந்து கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, முன்னாள் எம்எல்ஏ.க்கள் ஜி.சம்பத், விகேஆா்.சீனிவாசன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com