ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 6 மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 6 மாணவா்கள், ஒரு ஆசிரியை, ஆசிரியல்லாத பணியாளா் ஒருவா் என 8 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 6 மாணவா்கள், ஒரு ஆசிரியை, ஆசிரியல்லாத பணியாளா் ஒருவா் என 8 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வரை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 45,952 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 45,057 போ் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் 134 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த மாதம் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் தொடா்ந்து பரிசோதனை நடைபெற்று வருவதில் ராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தில் ஒரு மாணவருக்கும், அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் 5 மாணவ, மாணவிகளுக்கும் கரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியைக்கும், மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியரல்லாத பணியாளா் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு இருந்ததும் கண்டறியப்பட்டது. இவா்கள் மருத்துவத் துறையினரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதையடுத்து, பள்ளிகளில் கரோனா பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடா்ந்து எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கல்வித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com