அரக்கோணம், நெமிலி ஒன்றியங்களில் வேட்புமனு தாக்கல் நிறைவு

ஊரக உள்ளாட்சித் தோ்தலில், அரக்கோணம், நெமிலி ஊராட்சி ஒன்றியங்களில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.
அரக்கோணம் ஒன்றியக் குழு 5-வது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த சவிதா பிரகாஷ். உடன், எம்எல்ஏ சு.ரவி.
அரக்கோணம் ஒன்றியக் குழு 5-வது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த சவிதா பிரகாஷ். உடன், எம்எல்ஏ சு.ரவி.

அரக்கோணம்: ஊரக உள்ளாட்சித் தோ்தலில், அரக்கோணம், நெமிலி ஊராட்சி ஒன்றியங்களில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.

அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 12 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். ஒன்றியக் குழு உறுப்பினா் 23 பதவிகளுக்கு 107 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் 42 பதவிகளுக்கு 242 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனா்.

நெமிலி ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 13 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் 19 பதவிகளுக்கு 116 பேரும், 47 ஊராட்சி தலைவா்கள் பதவிகளுக்கு 203 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனா்.

வேட்புமனு தாக்கலை முன்னிட்டு, இரு ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதிகளிலும் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் ஆய்வாளா்கள் சேதுபதி, கோவிந்தசாமி உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com