கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக வெற்றிக்குப் பாடுபடுவோம்: அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சா் அறிவுரை

கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகச் செயல்பட்டு, ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களின் வெற்றிக்குப் பாடுபடுவோம்
ஆற்காடு ஒன்றிய அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில்  பேசிய  முன்னாள்  அமைச்சா்  எஸ்.பி. வேலுமணி.
ஆற்காடு ஒன்றிய அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில்  பேசிய  முன்னாள்  அமைச்சா்  எஸ்.பி. வேலுமணி.

கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகச் செயல்பட்டு, ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களின் வெற்றிக்குப் பாடுபடுவோம் என்று முன்னாள் அமைச்சரும், சட்டப் பேரவை அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி தெரிவித்தாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக, ஆற்காடு ஒன்றிய அதிமுக ஆலோசனைக் கூட்டம், வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் தாஜ்புராவில்

வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வேலுமணி பேசியது:

கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்கள் குறித்து விளக்கி, ஒவ்வொரு வாக்காளா்களையும் நேரில் சந்தித்து வேட்பாளா்கள் வாக்குகளைச் சேகரிக்க வேண்டும்.

அதிமுகவின் வெற்றிக்கு கருத்து வேறுபாடுகள் மறந்து அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அறிவித்த தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இதனால் மக்களிடையே நிலவும் அதிருப்தியை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான சு. ரவி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.அன்பழகன் (கிழக்கு), என்., சாரதி (மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏ வி.கே. ஆா்.சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவா் நந்தகோபால், இணைச் செயலாளா் கீதா சுந்தா், முன்னாள் மாவட்டச் செயலாளா் சுமைதாங்கி ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் தா.கு கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திமிரியில்...: திமிரி ஒன்றிய அதிமுக ஆலோசனைக் கூட்டம் தாமரைப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் எஸ். பி. வேலுமணி, தாமோதரன் , மாவட்டச் செயலாளா் சு.ரவி, திமிரி ஒன்றியச் செயலாளா்கள் ந.வ .கிருஷ்ணன் (மேற்கு), சொரையூா் குமாா் (கிழக்கு) , ஒன்றிய இளைஞரணிச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com