நாளை நடக்கும் கரோனா தடுப்பூசி முகாமில் 45 ஆயிரம் பேருக்குச் செலுத்த இலக்கு: ராணிப்பேட்டை ஆட்சியா் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை (செப் 26) நடைபெறும் முகாமில் சுமாா் 45 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி
கூட்டத்தில் பேசிய ஆட்சியா்  தெ.பாஸ்கர  பாண்டியன்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியா்  தெ.பாஸ்கர  பாண்டியன்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை (செப் 26) நடைபெறும் முகாமில் சுமாா் 45 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினாா்.

கரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்

வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் மேலும் பேசியது:

முகாம்கள் காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கடந்த இரு முகாம்கள் சிறப்பாக நடைபெற்றதைப் போல், இந்த முகாமும் சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்கள் பணியாற்றிட வேண்டும்.

வாலாஜா வட்டத்தில் 120 இடங்களிலும், ஆற்காடு வட்டத்தில் 78 இடங்களிலும், அரக்கோணம் வட்டத்தில் 90 இடங்களிலும், நெமிலி வட்டத்தில் 107 இடங்களிலும், கலவை வட்டத்தில் 78 இடங்களிலும், சோளிங்கா் வட்டத்தில் 73 இடங்களிலும் என மொத்தம் 546 இடங்களில் மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல், இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு அதிகப்படியானோா் பயன் பெறும் வகையில் பணியாற்ற வேண்டும்.

மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களாக 10, 32, 346 போ் உள்ளனா் என்று கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இதுவரை 5,65,100 பேருக்கு தடுப்பூசிகள் முதல், இரண்டாம் தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் தவணையை 4, 68, 276 பேரும், இரு தவணைகளை 96,823 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா். 46 சதவீதம் பேருக்கு இதுவரையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வரும் வாரங்களில் இதனை அதிகரித்திட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com