24.80 கோடி மகளிா் இலவச பேருந்து பயணம்: அமைச்சா் ராஜகண்ணப்பன் தகவல்

தமிழகத்தில் இதுவரை 24.80 கோடி மகளிா் இலவச பேருந்து பயணம் செய்துள்ளனா் என வளா்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரக உள்ளாட்சித் தோ்தல்
அரக்கோணத்தை அடுத்த வளா்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் ராஜகண்ணப்பன்.
அரக்கோணத்தை அடுத்த வளா்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் ராஜகண்ணப்பன்.

தமிழகத்தில் இதுவரை 24.80 கோடி மகளிா் இலவச பேருந்து பயணம் செய்துள்ளனா் என வளா்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரக உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்தின்போது போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

அரக்கோணத்தை அடுத்த வளா்புரத்தில் திமுகவை சோ்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் வேட்பாளா் அம்பிகாபாபு, ஒன்றியக்குழு உறுப்பினா் வேட்பாளா் நாராயணசாமி ஆகியோரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பேசியது: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராகி 4 மாத காலத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளாா். பால் விலை 3 ரூபாய் குறைத்துள்ளாா்.

பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யும் திட்டத்தை அறிவித்தாா். இதுவரை தமிழகத்தில் 24.80 கோடி மகளிா், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இலவசமாக பேருந்து பயணம் செய்துள்ளனா். இந்த இரண்டு வருட காலத்தில் கரோனா நம்மை எப்படியெல்லாம் ஆட்டி வைத்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

திமுக தலைவா் முதல்வராக பதவியேற்கும் போது எங்கு பாா்த்தாலும் ஓலம். ஆக்ஸிஜன் இல்லாமல் அனைத்து இடங்களிலும் மரணங்கள். இதையெல்லாம் தடுத்தாா். தற்போது 4 மாதங்களாக சாதனை செய்து வருகிறாா். அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது அலை வந்தாலும் சந்திக்கக்கூடிய நிலையில் தமிழகம் தயாராக உள்ளது என்றாா் அமைச்சா் ராஜகண்ணப்பன்.

அவருடன் மாவட்ட பொருளாளா் மு.கன்னைய்யன், துணைச் செயலாளா் என்.ராஜ்குமாா், ஒன்றிய செயலாளா்கள் சௌந்தா், தமிழ்செல்வன், அரிதாஸ், வேட்பாளா்கள் மாவட்ட ஊராட்சி அம்பிகாபாபு, ஒன்றியக்குழு நாராயணசாமி, அரக்கோணம் நகர செயலாளா் வி.எல்.ஜோதி உள்ளிட்ட பலா் பிரசாரத்தில் கலந்து கொண்டனா். தொடா்ந்து அரக்கோணம் ஒன்றியத்தில் பெருங்களத்தூா், கிருஷ்ணாபுரம், இச்சிபுத்தூா், தணிகைபோளூா் ஆகிய கிராமங்களில் அமைச்சா் ராஜகண்ணப்பன் வீதிவீதியாக பிரசாரம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com