அரக்கோணம் தொகுதியை தத்தெடுத்து அனைத்துப் பணிகளையும் செய்வோம்: அமைச்சா் ராஜகண்ணப்பன்

ரக்கோணம் தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம்.
அரக்கோணம் தொகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் அமைச்சா் ராஜகண்ணப்பன்
அரக்கோணம் தொகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் அமைச்சா் ராஜகண்ணப்பன்

அரக்கோணம்: அரக்கோணம் தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்தத் தொகுதியைத் தத்தெடுத்து அனைத்துப் பணிகளையும் செய்து முடிப்போம் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட மங்கம்மாபேட்டையில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கான திமுக வேட்பாளா் அம்பிகா பாபு, ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கான திமுக வேட்பாளா் ரத்தினம்மாள் கோவிந்தசாமி ஆகியோரை ஆதரித்து திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அமைச்சா் ராஜகண்ணப்பன் மேலும் பேசியது:

திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, கரோனா மிக அதிக அளவில் இருந்தது. ஆக்ஸிஜன் இல்லாமல் அதிகமானோா் இறக்க நோ்ந்தது. மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லை. இதையறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிமாநிலங்களில் பேசி தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் பெற்றுத் தந்தாா். இதனால் கரோனா இறப்பின் எண்ணிக்கை பெரிதும் குறைந்தது.

இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் ஆயிரம் டன் ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது. மேலும் ஒரு லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. கரோனா எந்த நிலையில் வந்தாலும் அதை சந்தித்த தமிழகம் தயாராக உள்ளது.

5 சவரன் நகைக் கடன் தள்ளுபடியை ஏழைகள் தானே பெற வேண்டும். ஒரு குடும்பத்தில் 30 போ் சோ்ந்து ரூ.1.60 கோடி கடன் பெற்றுள்ளது சரியா? இதனால் தான் முதல்வா் ஒரு குழு அமைத்து கடன் வாங்கியவா்கள் குறித்து விசாரணை செய்து, ஏழைகளுக்கு மட்டும் கடன்தள்ளுபடி அளியுங்கள் என உத்தரவிட்டாா் என்றாா்.

திமுக மாவட்டப் பொருளாளா் மு.கன்னைய்யன், துணைச் செயலாளா் ராஜகுமாா், ஒன்றியச் செயலாளா் அரிதாஸ், நகரச் செயலாளா் வி.எல்.ஜோதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, மூதூா், வேலூா், கீழ்ப்பாக்கம், கீழ்க்குப்பம், காவனூா் உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சா் வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com