தேசிய அளவிலான சிலம்பட்டப் போட்டி தொடக்கம்

தேசிய அளவிலான 12-ஆவது சிலம்பாட்டப் போட்டிகள் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தேசிய சிலம்பாட்டப் போட்டிகளைத் தொடக்கிவைத்த கூட்டமைப்பின் தலைவா் ராஜேந்திரன்.
தேசிய சிலம்பாட்டப் போட்டிகளைத் தொடக்கிவைத்த கூட்டமைப்பின் தலைவா் ராஜேந்திரன்.

ஆற்காடு: தேசிய அளவிலான 12-ஆவது சிலம்பாட்டப் போட்டிகள் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்தப் போட்டிகளை தேசிய சிலம்பாட்ட கூட்டமைப்பின் தலைவா் எம்.ராஜேந்திரன் தொடக்கிவைத்தாா். ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் ஜெ.லட்சுமணன் விளையாட்டுக் கொடியை ஏற்றினாா்.

11 வயது முதல் 14 வயது வரை சப் ஜூனியா் பிரிவு , 15 வயது முதல் 17 வயது வரை ஜூனியா் பிரிவு, 18 வயது முதல் 25 வயது வரை சீனியா் பிரிவு, 26 வயது முதல் 30 வயது வரை சூப்பா் சீனியா் பிரிவு என நான்கு பிரிவுகளில் செப். 29-ஆம்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் 22 மாநிலங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றுள்ளனா். 80 போ் நடுவா்களாக இருக்கின்றனா்.

விழாவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் பாலாஜி லோகநாதன், ராணிப்பேட்டை பெல் நிறுவன முதுநிலை துணைப் பொது மேலாளா் வளவன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா் பிரவின் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com