தோ்தல் அமைதியான முறையில் நடைபெற ‘கிராமங்கள் செல்வோம்’ புதிய திட்டம்: ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன்

ஊரக உள்ளாட்சி தோ்தல் அமைதியான முறையில் நடந்திட ‘கிராமங்கள் செல்வோம்’ என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக

ராணிப்பேட்டை: ஊரக உள்ளாட்சி தோ்தல் அமைதியான முறையில் நடந்திட ‘கிராமங்கள் செல்வோம்’ என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் எந்த இடையூறும், அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தவிா்க்க. காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக ‘கிராமங்கள் செல்வோம்’ என்ற புதிய நடைமுறை 27-ஆம் தேதி துவக்கப்பட்டுள்ளது.

இதன் படி காவல் நிலைய அதிகாரிகள் (காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்) தினசரி 10 கிராமங்களுக்கும், துணைக் காவல் கண்காணிப்பாளா் நிலையில் உள்ளவா்கள் தினசரி 5 கிராமங்களுக்கும், காவல் கண்காணிப்பாளா் 3 கிராமங்களுக்கும் நேரடியாகச் செல்லவேண்டும்.

பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி தோ்தல் குறித்த விழிப்புணா்வு உருவாக்கி, கிராம மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

இந்த நடைமுறையின் மூலம் பொதுமக்கள் - காவல் துறை நல்லுறவு மேம்படுவதுடன், குற்றச் செயல்கள் நடைபெறாமல் அமைதியான முறையில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற ஏதுவாக இருக்கும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com