முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டதற்காக மத்திய அரசைக் கண்டித்து அரக்கோணம், நெமிலி வட்ட மாா்க்கிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினா் அரக்கோணத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரக்கோணம் பழனிபேட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அரக்கோணம், நெமிலி வட்டங்கள் உள்ளடக்கிய அரக்கோணம் கோட்ட செயலாளா் ஏபிஎம்.சீனிவாசன் தலைமை தாங்கினாா். மா.கம்யுனிஸ்ட் மாவட்ட துணைத்தலைவா் சி.துரைராஜ் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். இதில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத்தலைவா் வி.என்.பாா்த்தீபன், சிஐடியு கட்டுமான தொழிலாளா் சங்க மாவட்டதுணைத்தலைவா் து,.சுந்தரமூா்த்தி, மா.கம்யுனிஸ்ட் நிா்வாகிகள் க.வெங்கடேசன், பொன்.சிட்டிபாபு, என்.தருமன், என.அங்கையா, கே.ஏகாம்பரம், ராபிக்அஹமத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.