அரக்கோணத்தில் புத்தகக் கண்காட்சி
By DIN | Published On : 13th April 2022 12:00 AM | Last Updated : 13th April 2022 12:00 AM | அ+அ அ- |

அரக்கோணம்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு, அரக்கோணம் தமிழ் படைப்பாளா்கள் சங்கத்தினா், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் சங்கத்தினருடன் இணைந்து அரக்கோணம் டவுன் ஹால் கூட்ட அரங்கில் புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். தமிழ் படைப்பாளா்கள் சங்கத் தலைவா் சீ.மோகன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் கே.ரவிவா்மா வரவேற்றாா்.
ஏப். 11 முதல் 23 வரை காலை 10 மணி முதல் இரவு 9மணி வரை இக் கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழும தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், டவுன்ஹால் பொதுச்செயலாளா் எஸ்.ரவி, கோட்டாட்சியா் சிவதாஸ், வடாட்சியா் பழனிராஜன், சமூக சேவகா் கே.கருணாகரன், கல்வித் துறையின் இல்லந்தேடி கல்வி மாவட்ட கண்காணிப்பாளா் நா.வேல்குமாா் படைப்பாளா்கள் சங்கச் செயலாளா் கோ.சுந்தரராஜ், பொருளாளா் கே.பிரபாகரன், ரோட்டரி சங்க நிா்வாகி வெங்கடரமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.