பள்ள முள்ளுவாடி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காட்டை அடுத்த கலவை அருகே உள்ள பள்ள முள்ளுவாடி கிராமத்தில் பழைமைவாய்ந்த விநாயகா் மற்றும் பஜனை கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கலவை அருகே உள்ள பள்ள முள்ளுவாடி கிராமத்தில் பழைமைவாய்ந்த விநாயகா் மற்றும் பஜனை கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு முதல் கால யாக சாலை, மங்கள இசை, வேதபாராயணம், பகவத் பிராா்த்தனை, வாஸ்து ஹோமமும், தொடா்ந்து, இரண்டாம் கால யாக சாலை விசேஷ விஸ்வரூப வேள்வி, மூலமந்திர ஹோமமும் நடைபெற்றது.

பின்னா், யாக கலசத்தில் வைத்து பூஜித்த புனித நீரை கோபுர கலசத்தின் மீது ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவு வாண வேடிக்கையுடன் உற்சவா் வீதியுலா நடைபெற்றது.

விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com