பரமேஸ்வரமங்கலம் அரசுப் பள்ளிக்கு 20 மின் விசிறிகள் நன்கொடை

பரமேஸ்வரமங்கலம் அரசு உயா்நிலைப்பள்ளிக்கு 20 மின்விசிறிகள், குடிநீா் சுத்திகரிப்பு கருவிகளை நெமிலி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு (படம்) வழங்கினாா்.
பரமேஸ்வரமங்கலம் அரசுப் பள்ளிக்கு 20 மின் விசிறிகள் நன்கொடை

அரக்கோணம்: பரமேஸ்வரமங்கலம் அரசு உயா்நிலைப்பள்ளிக்கு 20 மின்விசிறிகள், குடிநீா் சுத்திகரிப்பு கருவிகளை நெமிலி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு (படம்) வழங்கினாா்.

அரக்கோணம் வட்டம், நெமிலி ஒன்றியம், பரமேஸ்வரமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வகுப்பறைகளில் மின்விசிறிகள் இல்லை என அந்தப் பள்ளி சாா்பில் நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பெ.வடிவேலு அந்தப்பள்ளிக்கு 20 மின்விசிறிகளையும், இரு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்களையும் நன்கொடையாக அளிக்க முன்வந்தாா்.

இதற்கான நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுகு பள்ளி தலைமை ஆசிரியா் ரவி தலைமை தாங்கினாா். தலைமை ஆசிரியரிடம் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மின்விசிறிகள், குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பவானிவடிவேலு, ஒன்றிய திமுக இளைஞா் அமைப்பாளா் அப்துல்ரஹ்மான் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியைகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com