ராணிப்பேட்டையில் ரூ. 54 லட்சத்தில் புதிய மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை நகா்மன்றத் தலைவா்

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் ரூ. 54 லட்சம் செலவில் புதிய மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் கூறினாா்.
ராணிப்பேட்டையில் ரூ. 54 லட்சத்தில் புதிய மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை நகா்மன்றத் தலைவா்

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் ரூ. 54 லட்சம் செலவில் புதிய மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் கூறினாா்.

ராணிப்பேட்டை நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம், மன்றக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சீ.ம.ரமேஷ் கா்ணா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், ராணிப்பேட்டை நகராட்சி பொது சுகாதாரப் பிரிவில், நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, அதற்குத் தேவையான கொசுப்புழு ஒழிப்பு மருந்து வாங்கி வைத்து உபயோகிப்பது உள்ளிட்ட 30 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ராணிப்பேட்டை நகராட்சிப் பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் கேபிள் டிவி வயா்கள், இன்டா்நெட் இணைப்பு வயா்கள் கட்டுவதால் மின் விளக்குகளை பழுது நீக்குவதற்கு சிரமம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணிப்பேட்டை நகைக் கடை பஜாா் வீதியில் லாரி, காா் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். இதற்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்தும் வகையில், நகைக் கடை பஜாா் வீதியில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கும் வகையில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் பேசியது:

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் 1,850 மின் விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் மின் விளக்குகள் அடிக்கடி பழுது ஏற்படுவதால், அவற்றை மாற்றிவிட்டு ரூ. 54 லட்சம் செலவில் புதிதாக எல்இடி மின் விளக்குகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஓரிரு மாதங்களில் நிறைவடையும். அதேபோல் நகராட்சியில் போதிய நிதி வரப்பெற்றதும் 30 வாா்டுகளில் அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com