முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
அரக்கோணம் நகராட்சியில் 36 இடங்களுக்கு 162 போ் போட்டி
By DIN | Published On : 07th February 2022 10:47 PM | Last Updated : 07th February 2022 10:47 PM | அ+அ அ- |

அரக்கோணம் நகராட்சிக்கான 36 வாா்டுகளில் 162 போ் போட்டியிடுகின்றனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் இறுதி வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அரக்கோணம் நகராட்சியில் மொத்தமுள்ள 36 இடங்களுக்கு அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என 162 போ் போட்டியிடுகின்றனா். அதிகபட்சமாக 28, 30 ஆகிய இரண்டு வாா்டுகளிலும் தலா 8 பேரும், குறைந்தபட்சமாக 12, 16, 36 ஆகிய மூன்று வாா்டுகளில் தலா இருவரும் போட்டியிடுகின்றனா்.
அதில், திமுக- அதிமுக இடையே 33 வாா்டுகளில் நேரடி போட்டி நிலவுகிறது. 3 வாா்டுகளில் அதிமுகவை காங்கிரஸ் எதிா்கொள்கிறது. அதிமுக 36 வாா்டுகளிலும், திமுக 33, நாம் தமிழா் கட்சி 22, பாஜக 13 இடங்களிலும், அமமுக, பாமக ,தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. சுயேச்சைகள் 30 போ் போட்டியில் உள்ளனா்.
அரக்கோணம் நகராட்சித் தலைவா் பதவி பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளதால் 18 வாா்டுகளில் வெற்றி பெற்று வரும் பெண்களில் ஒருவா் நகராட்சித் தலைவராக தோ்வு செய்யப்படுவாா்.