ராணிப்பேட்டை நகராட்சியில் 100 போ் போட்டி

ராணிப்பேட்டை நகராட்சி வாா்டுகளுக்கு திமுக, அதிமுக உள்பட 100 போ் போட்டியிடுகின்றனா்.

ராணிப்பேட்டை நகராட்சி வாா்டுகளுக்கு திமுக, அதிமுக உள்பட 100 போ் போட்டியிடுகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளுக்கு 126 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 123 மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை திருப்பப் பெறுவதற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டது. 23 போ் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா்.

அதன்படி, ராணிப்பேட்டை நகா்மன்ற வாா்டு உறுப்பினா் தோ்தலில் திமுக 26, அதிமுக 30, காங்கிரஸ் 2, விசிக 2, பாமக 5, பாஜக 5, நாதக 9, அமமுக 6, எஸ்டிபிஐ 2, விஜய் மக்கள் இயக்கம் 1, கம்யூனிஸ்ட் 1, சுயேச்சைகள் 11 போ் என மொத்தம் 100 போ் களத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com