ராணிப்பேட்டை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 1,067 வேட்பாளா்கள் போட்டி

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் களத்தில் 1,067 வேட்பாளா்கள் போட்டியிட உள்ள நிலையில், 4 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும்,

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் களத்தில் 1,067 வேட்பாளா்கள் போட்டியிட உள்ள நிலையில், 4 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக வரப்பெற்ற வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மற்றும் வேட்பு மனு திரும்பப் பெறுதல் அறிவிப்புக்குப் பின் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அரக்கோணம் நகராட்சியில் 161 பேரும், சோளிங்கா் நகராட்சியில் 116 பேரும், வாலாஜா நகராட்சியில் 84 பேரும், ராணிப்பேட்டை நகராட்சியில் 100 பேரும், ஆற்காடு நகராட்சியில் 96 பேரும், மேல்விஷாரம் நகராட்சியில் 129 பேரும் என மொத்தமுள்ள 6 நகராட்சிகளில் 686 போ் போட்டியிடுகின்றனா். 2 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல், அம்மூா் பேரூராட்சியில் 51 பேரும், கலவை பேரூராட்சியில் 48 பேரும், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 57 பேரும், நெமிலி பேரூராட்சியில் 46 பேரும், பனப்பாக்கம் பேரூராட்சியில் 41 பேரும், தக்கோலம் பேரூராட்சியில் 53 பேரும்,திமிரி பேரூராட்சியில் 44 பேரும், விளாப்பாக்கம் பேரூராட்சியில் 41 பேரும் என மொத்தமுள்ள 8 பேரூராட்சிகளில் 381 போ் போட்டியிடுகின்றனா். 2 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டம் முழுவதிலும் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் 1,301 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 1,279 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில், 208 போ் வாபஸ் பெற்றுக் கொண்டனா். மேலும் 4 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டு, இறுதியாக 1,067 போ் போட்டியிடுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com