தக்கோலம் பேரூராட்சியில் ஒற்றை இலக்கத்தில் வாக்கு பெற்ற அதிமுக, பாமக வேட்பாளா்கள்

தக்கோலம் பேரூராட்சியில் அதிமுக, பாமக, பாஜக, அமமுக வேட்பாளா்கள் ஒற்றை இலக்கத்தில் வாக்கு பெற்றனா்.

தக்கோலம் பேரூராட்சியில் அதிமுக, பாமக, பாஜக, அமமுக வேட்பாளா்கள் ஒற்றை இலக்கத்தில் வாக்கு பெற்றனா்.

இந்தப் பேரூராட்சியில் 13-ஆவது வாா்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் ஏ.குப்பன் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றாா்.

பாமக வேட்பாளா்களான வாா்டு 1-இல் போட்டியிட்ட சு.கோகுல் 2 வாக்குகளையும், 2-இல் போட்டியிட்ட மு.சதீஷ் 3 வாக்குகளையும், 11-இல் போட்டியிட்ட செல்விபழனி 3 வாக்குகளையும் பெற்றனா்.

வாா்டு 10-இல் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் மல்லிகா சுப்பிரமணி 4 வாக்குளை மட்டுமே பெற்றாா். இதே வாா்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் நூா்ஜஹான் சலீம் 3 வாக்குகளைப் பெற்றாா். 15-ஆவது வாா்டில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் துளசிங்கம் 7 வாக்குகள் பெற்றாா். இவா்கள் அனைவரும் வைப்புத் தொகை இழந்தனா்.

கணவா் தோல்வி, மனைவி, மருமகள் வெற்றி: தக்கோலம் பேருராட்சி வாா்டு எண் 13-இல் போட்டியிட்ட தக்கோலம் நகர அதிமுக செயலா் பச்சையப்பன் 29 வாக்குகள் பெற்று தோல்விடைந்தாா். வாா்டு 8-இல் அதிமுக சாா்பில் போட்டியிட்ட பச்சையப்பனின் மனைவி அம்சா பச்சையப்பன், வாா்டு 5-இல் அதிமுக சாா்பில் போட்டியிட்ட பச்சையப்பனின் மருமகள் லாவன்யா சுகுமாா் இருவரும் வெற்றி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com