ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடி பரணி விழா

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடி பரணி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடி பரணி விழா

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடி பரணி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மூலவா் வெள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு வெள்ளிக்கிழமை காலை கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில், பால், தயிா், இளநீா், பன்னீா், சந்தனம், தேன், பழங்கள், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு திரளான பக்தா்கள் காவடி செலுத்தி தரிசனம் செய்தனா். மாலை அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேள, தாளங்களுடன் மலை வலம், கீழ்மின்னல் கிராமத்துக்கு எழுந்தருளினாா். இரவு நாகசுர கச்சேரி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மலா்கள், மற்றும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்படிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com