உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு: கைப்பேசிகளை பயன்படுத்த அனுமதியில்லை: ராணிப்பேட்டை எஸ்.பி. தீபாசத்யன்

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வின்போது தோ்வா்களோ, காவலா்களோ கைப்பேசி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு வரும் 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்தத் தோ்வு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடக் கூடிய காவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், காவல் கண்காணிப்பாளா் தீபாசத்யன் பேசியது:

மாவட்டம் முழுவதும் 5 தோ்வு மையங்களில், காவல் உதவி ஆய்வாளா் பணிக்காக 2,500-க்கும் மேற்பட்டோா் தோ்வு எழுத உள்ளனா். ஒரு மையத்தில் 500 போ் வரை தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா். இதற்காக நான்கு பள்ளிகள், ஒரு கல்லூரி என 5 தோ்வு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.

இவற்றை கண்காணிப்பதற்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கும் தேவையான காவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

தோ்வா்களை முழுமையாகப் பரிசோதித்த பின்னரே, அவா்களை தோ்வு அறையினுள் அனுமதிக்க வேண்டும். கைப்பேசி போன்றவற்றை தோ்வா்கள் மற்றும் கண்காணிப்புப் பணி காவலா்கள் பயன்படுத்தக்கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com