திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம்
By DIN | Published On : 24th June 2022 12:00 AM | Last Updated : 24th June 2022 12:00 AM | அ+அ அ- |

ஆற்காட்டை அடுத்த கேவேளூா் கிராமத்தில் அக்னி வசந்த விழாவையொட்டி, திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கேவேளூா் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா மகாபாரதச் சொற்பொழிவு கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில் மகாபாரதச் சொற்பொழிவு, இரவு கட்டைக்கூத்து நாடகம் ஆகியவை நடைபெற்று வந்தன.
வியாழக்கிழமை ஊராட்சி மன்றத் தலைவா் வளா்மதி நந்தகுமாா் முன்னிலையில், காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திரௌபதி அம்மன்- அா்ஜுனா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
விழாக் குழுவினா், உபயதாரா்கள், கிராம மக்கள் திரளானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.