முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
60 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்
By DIN | Published On : 19th March 2022 10:19 PM | Last Updated : 19th March 2022 10:19 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தற்போது கூடுதலாக 33 இடங்கள் உள்பட மொத்தம் 60 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் 27 இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் 17.03.2022 முடிய சுமாா் 927 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது நவரைப் பருவ நெல் அறுவடையை முன்னிட்டு இணையதளம் மூலம் பதிவு செய்து நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக 21.03.2022 முதல் மேலும், கூடுதலாக 33 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.
அதன்படி பழையகேசாவரம், வளா்புரம், திருமாதலம்பாக்கம், மேலந்தாங்கல், கே.வேளூா், அனத்தாங்கல், வெள்ளம்பி, தாளிக்கல், வேம்பி, சென்னசமுத்திரம், அகரம், மருதாலம், ஒழுகூா், செங்கல்நத்தம், கரிக்கல், வேடந்தாங்கல், சேரி, காவேரிப்பாக்கம், கீழ்களத்தூா், கீழ்வீதி, மேலபுலம் புதூா், பெரும்புலிப்பாக்கம், நெமிலி, செங்காடு, வள்ளுவம்பாக்கம், கூராம்பாடி, மேல்வீராணம், பரவத்தூா், சேந்தமங்கலம், காட்டுப்பாக்கம், களத்தூா், ரெட்டிவலம், ஆற்காடு ஆகிய இடங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ.ங்க்ல்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து பயனடையலாம்.
மேற்கண்ட கொள்முதல் நிலையங்களையும் சோ்த்து இந்த மாவட்டத்தில், மொத்தம் 60 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.