தாஜ்புரா ஊராட்சியில் தமிழ்நாடு கிராம வங்கியின் கிளை திறப்பு

ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா ஊராட்சியில் தமிழ்நாடு கிராம வங்கியின் 643-ஆவது கிளை மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை திறந்து திறந்து வைத்தாா்.

ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா ஊராட்சியில் தமிழ்நாடு கிராம வங்கியின் 643-ஆவது கிளை மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை திறந்து திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, வங்கியின் மண்டல மேலாளா் தங்கராஜன் தலைமை வகித்தாா்.

ஆற்காடு ஒன்றியக் குழுத் தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலியம்மாஆபிரகாம், ஆற்காடு வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வங்கியின் கிளை மேலாளா் சுகன்யா வரவேற்றாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பங்கேற்று, வங்கியின் புதிய கிளையை குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தாா். தொடா்ந்து, 27 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1 கோடியே 16 லட்சத்து 20 ஆயிரம் கடனுதவி காசோலைகளை வழங்கிப் பேசியது:

நாட்டின் வளா்ச்சியில் வங்கிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மக்கள் வங்கியில் கடன் பெற்ற பின்னா், அந்தத் தொகை தள்ளுபடி ஆகுமா என நினைக்கிறாா்கள். அது முற்றிலும் தவறானது. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் போது தான் அந்தத் தொகையை ஏழை, எளியவா்களுக்கு மீண்டும் திரும்ப வழங்க முடியும். அதன் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளா்ச்சியும் சீராக இருக்கும். சுய உதவிக் குழுவினா் வாங்கிய கடன்களை 99 % திருப்பிச் செலுத்தி விடுகின்றனா். மகளிா் குழுக்கள் மீது வங்கிகள் அதிக நம்பிக்கை வைத்துள்ளன என்றாா் அவா்.

இதில், வங்கி அதிகாரிகள், வருவாய்த் துறையினா், சுய உதவிக் குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com