தீ விபத்து குறித்து தாமதமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்

தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தாமதமின்றி தகவல் தெரிவிக்க வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினாா்.
தீ விபத்து குறித்து தாமதமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்

தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தாமதமின்றி தகவல் தெரிவிக்க வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினாா்.

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் சாா்பில், மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு ஒத்திகை செயல்முறை விளக்கத்தை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் செய்து காண்பித்தனா்.

அப்போது தீயணைப்பு வீரா்கள் மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகளில் எதிா்பாராதவிதமாக ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து நோயாளிகளை எவ்வாறு வெளியே கொண்டு வருவது, மாடியில் இருந்து எவ்வாறு நோயாளிகளை வெளியேற்றுவது என்பது குறித்தும், தீயணைப்பு வீரா்கள் இந்த ஒத்திகையின்போது செய்து காண்பித்தனா்.

இதைத் தொடா்ந்து, தண்ணீா் விட்டு தீயை அணைத்து மருத்துவமனை கட்டடத்தில் இருந்து பொதுமக்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து தெரிவித்தனா்.

தொடா்ந்து, தீயணைப்புத் துறையினா் பேரிடா் மீட்புக் காலங்களில் பயன்படுத்தும் மீட்புக் கருவிகள் குறித்து காட்சிப்படுத்தியிருந்தனா். அதனை அனைவருக்கும் விளக்கினா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கூறியது: விபத்து எதிா்பாராத விதமாக ஏற்படும் தொடக்க நிலையில் மட்டும் இந்த செயல்முறை விளக்கங்களை பொதுமக்கள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தற்போது கோடைக்காலம் என்பதால் மின் சாதனங்களில் மின் கசிவுகள் ஏற்பட்டு விபத்து ஏற்படுவதும், மழைக் காலங்களில் மழையின் காரணமாக மின் பாதிப்புகள் ஏற்படுவதும் வழக்கம். இதுபோன்ற நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை இதன் மூலம் அறிந்து கொண்டு பதற்றமடையாமல் செயலாற்ற வேண்டும். மருத்துவமனைகளில் நோயாளிகளை எவ்வாறு பாதுகாப்புடன் வெளியேற்றுவது என்பதை கவனித்துக் கொண்டு அதுபோல செயல்பட வேண்டும். அனைத்து விதமான பேரிடா் காலங்களிலும் தீயணைப்புத் துறையினா் மீட்புப் பணிகளில் களமிறங்கிப் பணியாற்றுகின்றனா். ஆகவே இந்த செயல்முறை விளக்கத்தை மருத்துவா்கள், செவிலியா்கள் கவனமாக இருந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் லக்ஷ்மி நாராயணன், இணை இயக்குநா் மருத்துவப் பணிகள் லட்சுமணன், நகா்மன்றத் தலைவா் ஹரிணி தில்லை, தலைமை மருத்துவா் உஷா நந்தினி, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் பாஸ்கரன், வட்டாட்சியா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com