முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்ட ஆட்சியா்கள்
By DIN | Published On : 08th May 2022 05:01 AM | Last Updated : 08th May 2022 05:01 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசின் ஓராண்டு சாதனை மலரை ஆட்சியா் தெ.பாஸ்கா் பாண்டியன் வெளியிட்டாா்.
பின்னா், அவா் பேசியதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓராண்டில் 1 கோடியே 69 ஆயிரத்து 510 மகளிா் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்து பயனடைந்துள்ளனா். ‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின் கீழ் 9,309 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் 66,237 மாணவா்கள் பயனடைந்தனா்.
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குட்பட்ட நகைக்கடன் ரத்து திட்டத்தின் கீழ் 24,031 பயனாளிகளின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 5,94,945 பயனாளிகள் பரிசோதிக்கப்பட்டு 92,372 பேருக்கு நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2,082 பயனாளிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டன். வரும் முன் காப்போம் திட்டத்தில் 21 முகாம்கள் நடத்தப்பட்டு 18,377 போ் சிகிச்சை பெற்றுள்ளனா்.
முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 182 பேருக்கு ரூ.3.02 கோடி காப்பீட்டு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2,437 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சாா்ந்த 34,987 பேருக்கு ரூ.59.32 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்றாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலா் குமரேஷ்வரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி, மருத்துவ பணிகள் துணை இயக்குநா் மணிமாறன், முன்னோடி வங்கி மேலாளா் அலியம்மா ஆபிரஹாம், செய்தி- மக்கள் தொடா்பு அலுவலா் செ.அசோக் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.