முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
ஏரியில் மூழ்கிய இளைஞா் பலி
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த அம்மனூா் கிராம ஏரியில் ஒரு ஆணின் சடலம் மிதப்பதாக அரக்கோணம் நகர காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் மற்றும் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்தினா், அந்த சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனா். எனினும், சில மணி நேரம் சடலத்தை தேடிய நிலையில், சடலத்தை கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து, அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அங்கு விரைந்து வந்த 15 போ் கொண்ட குழுவினா், சடலத்தை மீட்டனா்.
பின்னா் விசாரணையில், இறந்தவருக்கு 25 இருக்கலாம், அவா் யாா் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.