முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
ஆயிலம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட முகாம்
By DIN | Published On : 12th May 2022 12:00 AM | Last Updated : 12th May 2022 12:00 AM | அ+அ அ- |

ஆற்காட்டை அடுத்த ஆயிலம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்ட முகாம் ஆயிலம் புதூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆயிலம் ஊராட்சி மன்றத் தலைவா் பிரபாவதி ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் மணிவண்ணன், உதவி வேளாண்மை அலுவலா் வினோத்குமாா், ஊராட்சி செயலாளா் ம.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அரசின் தரிசு நில மேம்பாடு திட்டத்தின்கீழ், ஆழ்துளைக் கிணறு மூலம் விவசாயிகளுக்கு சொட்டுநீா்ப் பாசனம் அமைத்தல், மின் மோட்டாா் மாற்ற மானியம், இயந்திரம் குறைந்த வாடகைக்கு வழங்குதல், பட்டா மாற்றம், பண்ணைக் குட்டை அமைத்தல், பிரதமரின் விவசாயிகளுக்கான கடன் அட்டை வழங்குதல், வேளாண்மை, தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
இதில், மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வேலாயுதம், வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளா்கள், ரவிகுமாா், ரூபன்குமாா், ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தாமரை, ஆயிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் ரேணு மற்றும் பல்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.