முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
இரு லாரிகளுடன் 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 12th May 2022 12:00 AM | Last Updated : 12th May 2022 12:00 AM | அ+அ அ- |

அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்ப்பட்ட லாரிகளுடன் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.
அரக்கோணத்தில் இருந்து லாரி மூலம் கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.
அரக்கோணத்தை அடுத்த அம்மனூா் கிராமத்தில் இருந்து தேவதானம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில், ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு அரிசி மூட்டைகள் மாற்றப்படுவதாக மாவட்ட உளவுப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா், அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்தவா்களும், லாரி ஓட்டுநா்களும் தப்பியோடி விட்டனா். இதையடுத்து, அந்த லாரியில் இருந்து 8 டன் எடை கொண்ட அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் இரு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடா்ந்து அளிக்கப்பட்ட தகவலையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 8 டன் அரிசி மற்றும் 2 லாரிகளை, மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் சதீஷ்குமாா், உதவி ஆய்வாளா் மோகன் ஆகியோரைக் கொண்ட குழுவினா் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.