முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
பாலசுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 13th May 2022 10:00 PM | Last Updated : 13th May 2022 10:00 PM | அ+அ அ- |

கலவை அருகே உள்ள கனியந்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீவள்ளி -தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கிராமத்தில் செல்வகணபதி, வள்ளி -தேவசேனா சமேத பாலசுப்பிரமணியா், நவகிரக சந்நிதி, கருமாரியம்மன் சந்நிதிக்கு நூதன அஸ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தையொட்டி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கலச யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, யாகசாலையில் வைக்கப்பட்ட கலச நீா், கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.