ராணிப்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க உத்தரவு

ராணிப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியைக் குறித்த காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் ஆா்.காந்தி உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் ஆா்.காந்தி.
ராணிப்பேட்டையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் ஆா்.காந்தி.

ராணிப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியைக் குறித்த காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் ஆா்.காந்தி உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை நகராட்சிக்குள்பட்ட நவல்பூா் பகுதியில் ரயில் வழித்தட பாதையில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பழைய ரயில்வே மேம்பாலத்தை அகற்றி விட்டு, உயா்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

அதனடிப்படையில், உயா்மட்ட மேம்பாலம் ரூ.26 கோடியில் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது 25 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளது. 26 தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது சாலை கட்டமைப்புகள் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் 19.1.2023-க்குள் முடிக்க கால நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேம்பாலத்தின் கீழ் அணுகு சாலை (சா்வீஸ்) அமைக்க நவல்பூா் சிஎஸ்ஐ ஆலயச் சுற்று சுவா் பகுதியில் சுமாா் 1,427 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது. இதைக் கையகப்படுத்த அந்த இடத்தை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சாலை அமைக்க நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க ஆலயக் குழுவிடம் கேட்டுக் கொண்டாா். இதற்கான உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். ஆகவே இதன் மீது தனிக் கவனம் செலுத்தி அனுமதி பெற்றுத் தர வேண்டும் எனவும் அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.

மேலும், மேம்பாலப் பணிகளை குறித்த காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை, ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்.எல்.ஏ. ஜே.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் உதவிச் செயற்பொறியாளா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com