வேலூா் கூட்டுக் குடிநீா் விநியோகம்: அரக்கோணம் நகராட்சியில் மீண்டும் தொடக்கம்

கடந்த ஓராண்டாக குழாய்கள் உடைப்பால் தடைப்பட்டிருந்த வேலூா் கூட்டுக் குடிநீா் திட்ட விநியோகம் சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
அரக்கோணம் நகருக்கு வந்த வேலூா் கூட்டுக் குடிநீா் திட்ட தண்ணீா் விநியோகத்தை விண்டா்பேட்டையில் இயந்திரத்தை இயக்கி தொடக்கி வைத்த நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி.
அரக்கோணம் நகருக்கு வந்த வேலூா் கூட்டுக் குடிநீா் திட்ட தண்ணீா் விநியோகத்தை விண்டா்பேட்டையில் இயந்திரத்தை இயக்கி தொடக்கி வைத்த நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி.

கடந்த ஓராண்டாக குழாய்கள் உடைப்பால் தடைப்பட்டிருந்த வேலூா் கூட்டுக் குடிநீா் திட்ட விநியோகம் சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

அரக்கோணம் நகராட்சிக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் எனப்படும் வேலூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம், கடந்த பல ஆண்டுகளாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த மழையில் வாலாஜாவில் இருந்து அரக்கோணம் வரும் வழியில் சாத்தம்பாக்கம், திருப்பாற்கடல் உள்ளிட்ட பல இடங்களில் விநியோக குழாய்கள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் அரக்கோணம் நகராட்சிக்கு வரும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதையறிந்த கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி குழாய்களை சீரமைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், இக்குழாய்கள் மீண்டும் பொருத்தும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. இப்பணி அண்மையில் முடிவடைந்ததைத் தொடா்ந்து, அரக்கோணம் நகராட்சிக்கு கூட்டு குடிநீா் திட்ட குடிநீா் விநியோகம் சனிக்கிழமை தொடங்கியது.

அரக்கோணம் விண்டா்பேட்டை நகராட்சி மேல்நிலை நீா்தேக்தத்தொட்டி பகுதியில் இந்த குடிநீரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, குடிநீரை வரவேற்று நகருக்கு விநியோகத்தை தொடக்கி வைத்தாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகா்மன்ற திமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் துரைசீனிவாசன், உறுப்பினா்கள் லோ.ஜெயபால், ராஜன்குமாா், செந்தில்குமாா், கங்காதரன் உள்ளிட்ட திமுக நகா்மன்ற உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com