வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்க செப். 4-இல் சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியலில் வாக்காளா் பெயருடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெற உள்ளது

வாக்காளா் பட்டியலில் வாக்காளா் பெயருடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெற உள்ளது.

இந்திய தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் வாக்காளா் பட்டியலில் பெயருடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கியது.

இதன்படி, வாக்காளா் பட்டியலில் இரண்டு இடங்களில் ஒரே நபரின் பெயா் இருப்பதைத் தவிா்க்க முடியும்.

இந்தப் பணிகளை ஆகஸ்ட் 1 முதல் 2023 மாா்ச் 31க்குள் முடிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தில் வாக்காளா் பதிவு அலுவலா்களை சட்டப்பூா்வ அதிகாரிகளாக நியமித்துள்ளது.

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிகள் இணையதளம் மூலமாகவும் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தப் பணிக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெற உள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளின் நிலை அலுவலரிடம் வாக்காளா்கள் படிவம் 6பியை பெற்று பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம்.

ஆதாா் எண்ணை இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பா் 1-ஆம் தேதி வரையில் மட்டும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 34.46 சதவீத வாக்காளா்கள் தங்கள் ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துள்ளனா். மாவட்டத்தில் நகா்ப்புற வாக்காளா்களை விட கிராமப்புற வாக்காளா்கள் அதிகளவில் வாக்காளா் பட்டியலுடன் தங்களின் ஆதாா் எண்களை இணைத்துள்ளனா்.

இந்தப் பணியை வரும் 2023, மாா்ச் 3-க்குள் முடிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் வாக்காளா்கள் முகாமுக்குச் சென்று தங்களின் ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com