மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை: ஆட்சியா் தகவல்..

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மாதத்தின் முதல் வார செவ்வாய்க்கிழமை மட்டுமே வழங்கப்படும் என ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு  நலத்திட்ட  உதவிகளை  வழங்கிய ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு  நலத்திட்ட  உதவிகளை  வழங்கிய ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மாதத்தின் முதல் வார செவ்வாய்க்கிழமை மட்டுமே வழங்கப்படும் என ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சாா்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு,மாதத்தின் முதல் வார செவ்வாய்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம், புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும்.

அதன் படி இந்த வார முகாமில் கலந்துகொண்ட 427 போ்களில் கை, கால் பாதிக்கப்பட்டவா்கள் 187 பேரும், காது கேளாதோருக்கான 52 நபா்களுக்கும், கண் பாதிக்கப்பட்டவா் 54 பேரும், மனவளா்சி குன்றிய மருத்துவரால் 69 பேரும் மற்றும் குழந்தை நல மருத்துவரால் 19 பேரும் சம்மந்தப்பட்ட மருத்துவா்களால் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுகள் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான முதலமைச்சா் காப்பீட்டு திட்டத்தில் 127 பேருக்கு பதிவும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அறிவுசாா் குறைபாடுயவா்களுக்கான பராமரிப்பு நிதி உதவித்தொகை வேண்டி 59 பேரும், வங்கிக் கடன் வேண்டி 37 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டா் வேண்டி 17 பேரும்,சக்கர நாற்காளி வேண்டி 9 பேரிடமும் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.மேலும் 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

மேலும், முகாமில் கலந்து கொண்ட 400- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களுடன் வந்திருந்த பாதுகாவலா்களுக்கு ஸ்ரீ சக்தி அம்மாவின் 47 -ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ தீனதயாள் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சாா்பாக மாவட்ட ஆட்சியா் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுகளை வழங்கினாா்.

இம்முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணகுமாா், மருத்துவா்கள், மாற்றுத் திறனாளி நல அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com