வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையக் கட்டடம் திறப்பு

வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையக் கட்டடத்தை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்.
வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையக் கட்டடம் திறப்பு

வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையக் கட்டடத்தை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்.

இந்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.28.84 லட்சத்தில் புதிதாக சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையக் கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று, சிறப்பு பச்சிளம் குழந்தைகள் மையக் கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.

இந்த பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையக் கட்டடத்தில், பிறந்தவுடன் அழாத குழந்தைகள், மூச்சுத் திணறல் ஏற்படும் குழந்தைகள், நோய்த் தொற்று ஏற்பட்ட குழந்தைகள், மஞ்சள் காமாலை பாதித்த குழந்தைகள், எடை குறைவாகப் பிறந்த குழந்தைகள், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள், வேறு ஏதேனும் சிக்கலுடன் பிறந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

பிறந்த குழந்தைகள் 28 நாள்கள் வரை இந்த மையத்தில் வைத்து கண்காணிக்கப்படும்.

மேலும், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, 10 படுக்கைகள் கொண்ட சிகிச்சைப் பிரிவு அறை, குழந்தைப் பேறு பெண்கள் அறை, செவிலியா்கள் அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

விழாவில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, மருத்துவமனைத் தலைமை மருத்துவா் உஷா நந்தினி, குழந்தைகள் நல மருத்துவா் கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com